Monday, 25 July 2011

குளியலறையின் அபிலாசைகள்




இமைகளற்ற கண்களை  மட்டும் கொண்டு
என்ன செய்துவிட முடியும்...
நிர்வாணங்கள்
உதாசினப்படுத்தும்போது
முகத்தில் அறையும்போது
தேகத்தில் வழியும்போது
இருளை அணிந்து
தாழ்திறந்து
பேரிருளுக்குள் பிரவேசிக்கும்போது...
திருகப்பட்ட நா நுனியில் சொட்டுகிறது
அபிலாசைப் பிரவாகத்தின்
சில துளிகள் 
குளியலறைக்கு.

-இயற்கைசிவம் 

2 comments:

  1. அதே தவிப்பும் துடிப்பும் வார்த்தைகள் மூலம் கடத்தப்படும் சாதனமாய் இக்கவிதை.

    ReplyDelete