Wednesday, 31 August 2011

செங்கொடி

File:Space Fire.jpg
நீ
தீ எழுதினாய்
ஆகுதீ ஆனாய்...
தீ.,
பின்பு எங்கள் கவிதைகளைத் தின்றது
கட்டுரைகளைத் தின்றது
குரல்களை,
பட்டினிகளைத் தின்றது...
இன்னமும் நாக்கைத் துழாவும் அதற்கு
அதிகாரத் திமிரும்
அகம்பாவக் கொழுப்பும்
இனமழிக்கும் காழ்ப்பும் பருத்திருக்கும்
கயிறுகளைக் காட்டியிருக்கிறோம்
கொடியை மேய்ந்த அதற்கு
கயிறுகள் கசக்கவா போகிறது தோழி.

-இயற்கைசிவம்.

No comments:

Post a Comment