Friday, 11 November 2011

பயணங்களின் அனுபவமற்ற தெரு

 பயணங்களின் அனுபவமற்ற
என் தெருவில்
வெயிலின் சுவடுகளாய்
திரிகின்றன சருகுகள்
நடுநிசியில் ஏறி
மேயும் கண்களுக்கு
காணக் கிடைக்கின்றன
நகருக்கு வெளியே இருக்கும்
இன்னபிறத் தெருக்களின் முனகல்கள்
பறவைகளின் நிழல்கள்
மேகங்களின் நிழல்கள்
மற்றும்
வெயிலின் சுவடுகளின் நிழல்கள்
அனைத்திலும் 
பயணங்கள் குறித்துக் கிரங்கித் தோயும்
பயணங்களின் அனுபவமற்ற
என் தெரு
நடுநிசியில் ஏறி மேயும்
கண்களுக்குக் காத்திருக்க
பழகியிருந்தது
இப்போது.
-இயற்கைசிவம்   

No comments:

Post a Comment