Wednesday, 14 December 2011

தாத்தா பாட்டி கைகளை சேமிக்கத் தெரியாதவர்கள்...


அம்மாவின் கைகள்
மிருதுவானவை
உறங்கும்வரை
முதுகில் தட்டிக்கொண்டு 
தலை கோதிக்கொண்டு
மழைக்குச்சிகள் போல 
அலாதியானவை
கனமானவை என்றாலும்
சாலைகள் கடக்கும் போது
தன்னிச்சையாய்
இறுகப் பற்றிக்கொள்ளும்
அப்பாவின் கைகளிலும் உணர்ந்திருக்கிறேன்
மழைக்குச்சிகளை  
ஈரம் வற்றி 
சுருக்கங்கள் விரவக்கூடும்
இக் கைகளை
இழக்காதிருக்கவும் 
பாப்பாவின் கைகளில்
பதியன் செய்கிறேன் 
அடிக்கடி கைகளைப் பற்றி 
அவள் கைகளுள் சேர்க்கும்
என்னைப்பார்த்து 
குழந்தைகளாய் சிரிக்கிறார்கள்
தாத்தா பாட்டி கைகளை சேமிக்கத் தெரியாதவர்கள்.
-இயற்கைசிவம் 

3 comments:

  1. பாப்பாவின் கைகளில்
    பதியன் செய்கிறேன்

    வாவ்.. அருமை.. கவிதையிலும் சேமித்து விட்டீர்கள்.

    ReplyDelete
  2. தலைமுறை இடைவெளிகளை நிரப்பிட இது போன்ற கவிதைகள் இன்னும் ஆயிரமாயிரம் தேவை. தாத்தா பாட்டி கைகளை சேமிக்கத் தெரிந்தவளாயிருப்பதை எண்ணி என்னுள் பெருமிதம் உண்டாக்கிய கவிதை. ரிஷபன் சார் குறிப்பிட்டுள்ள வரிகளில் நானும் சொக்கினேன். பாராட்டுகள்.

    வார்த்தை சரிபார்ப்பை நீக்கிவிட்டால் பின்னூட்டமிட விரும்புபவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்குமே.

    ReplyDelete
  3. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete