Thursday, 15 December 2011

ஆகச்சிறந்த பிராத்தனைகள்


தேக்கியிருக்கும் 
நூற்றுச்சிதறல்களுடன் 
பதற்றமற்ற மௌனத்தில்
விழித்திருக்கிறது வெடி

பேரிரைச்சலினுள்
தவறி விழுந்துவிடுகிறது  
ஒரு நிசப்தம்

அலகிலிருந்து
தவறி விழுகிறது 
ஒரு மீன் 

இப்போதைய
ஆகச்சிறந்த பிராத்தனைகள் எல்லாம்
எந்தத் தூறலும்
வலுத்துவிடக்கூடாது என்பதுதான் 

-இயற்கைசிவம்  

6 comments:

  1. மறைபொருள் புரியாநிலையிலும் மனக்குளத்தில் சஞ்சலம் ஏற்படுத்திச் செல்கிறது அலகிலிருந்து தவறி விழுந்த மீனாய் கவிதை வரிகள்.

    ReplyDelete
  2. படமும் கவிதையும் இனம் புரியாத நடுக்கம் தருகின்றன

    ReplyDelete
  3. கவிதை நல்லாயிருக்கு. (''நூற்றுச் சிதறல்கள்... சிதறல் வல்லின ற அல்லவா? )

    ReplyDelete
  4. ஜனா. நீங்கள் சொல்வது போல வல்லின 'ற' தான் வரவேண்டும்
    திருத்தியிருக்கிறேன். இது போன்ற கருத்துக்கள்
    வலைப்பூவை மேலும் மெருகேற்றும். தங்களின்
    அன்பிற்கும் வாசிப்பிற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  5. ரிஷபன் சார், வழக்கமான உங்கள் ரசித்தல் பற்றிய எண்ணம்
    எழுதும் போதே விரியத்துவங்குகிறது
    காட்சிகளாய்...

    ReplyDelete
  6. கீதா. தங்களின் தொடர்ச்சியான வாசிப்பில் எனது படைப்புலகம்
    இன்னும் பெரிதாய் விரிகிறது. மேலும் இந்த கவிதையை வெளியிடுகையில்
    கடைசி நொடியில் வெடி என்பதை கயிறு என குழப்பத்தில்
    மாற்றிவிட்டேன் , பின்னர் தவறு புரிந்து திருத்தியிருக்கிறேன் வாய்ப்பிருந்தால் மீண்டும்
    வாசியுங்கள். தங்களின் அன்பிற்கும் நேர்த்தியான வாசிப்பிற்கும் என் நன்றிகள்.

    ReplyDelete