Friday, 16 December 2011

எதிர் திசையில் மட்டுமே பயணிக்கக் கூடியவை


நான் பின்னோக்கிச் செல்வதாக
சொல்லிப் போகிறது 
ஒரு பறவை

உண்மையில் நான்
நடந்துக்கொண்டிருந்தேன்

கேட்பதாகயில்லை 
எனினும்
அடுத்தடுத்துக் கடக்கும்
எல்லா பறவைகளும்
நான்
பின்னோக்கிச் செல்வதாகவே 
சொல்லிப் போகின்றன

உண்மையில் நான்
நடந்துக்கொண்டிருந்தேன்

இருத்தலில் 
இருக்கும்
யாவும்
எதிர் திசையில் மட்டுமே
பயணிக்கக் கூடியவை

உண்மையில் 
திரும்பி வந்தாகவேண்டிய
இப்பாதையில்
நான்
முன்னதாக
நடந்துக்கொண்டிருந்தேன்.
-இயற்கைசிவம்.

2 comments:

  1. கவிதைக்கான இடம் எப்போதோ நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.. கவிஞனின் இடமும்.

    ReplyDelete
  2. வணக்கம் இயற்கைக்கு!

    எங்கள் பயணங்கள் சரியாக இருக்கும்போது முரண்படுபவர்களுக்கு அது எதிர்த்திசைதானே !

    ReplyDelete