Saturday, 17 December 2011

அருவிக்குப் போகயிருக்கும் மழை


பெரிய மழை
பெரிதாய் இன்னும் பெரிதாய் 
வலுதுக்கொண்டிருந்தது
மூழ்கிக்கொண்டிருக்கும்
யாவரின் அபயத்தையும் 
கேட்கமுடியாதபடிக்கு
பேரிரைச்சலோடு வலுத்துவிட்டிருந்தது
இந்த மழையை
ஒரு அருவிக்கு
அழைத்துப்போகயிருக்கிறது 
காற்றின் வாகு.
-இயற்கைசிவம்

5 comments:

  1. அடுத்தவர் பிரச்சனை எனக்கில்லை என்பதுபோல !

    சின்னக் கவிதைகள்தான்.ஆனால் காத்திரமாயிருக்கின்றன.உங்களிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றது எனக்கு !

    ReplyDelete
  2. இந்த மழையை
    ஒரு அருவிக்கு
    அழைத்துப்போகயிருக்கிறது
    காற்றின் வாகு.
    ஆஹா..

    ReplyDelete
  3. என் எண்ணங்களை அழகாய் ஏகாந்த உலகுக்கு அழைத்துப் போகிறது,கவிதையின் வாகு. அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி கீதா
    தங்களின் வாசிப்பும் கருத்துக்களும் என் தேடல்களை
    இன்னும் அடர்த்தியாக்குகின்றன.

    ReplyDelete
  5. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி கீதா
    தங்களின் வாசிப்பும் கருத்துக்களும் என் தேடல்களை
    இன்னும் அடர்த்தியாக்குகின்றன.

    ReplyDelete