Monday, 19 December 2011

குளிர்கிற தீ


இத்தனை ஆண்டுகளின் பின்

உன் நியாபகங்கள் வந்ததற்கு
எந்த முகாந்திரமும் இல்லை

வாசம் மிகுந்த சோப்பு
விலையுயர்ந்த ஷாம்பூ 
முகப்பூச்சு 

எத்தனை முறை 
என்ற பிரக்ஞையற்று 
கலைத்து வாரிய தலை

இஸ்த்ரி போட்ட சட்டை
வெளுத்திருக்காத பேண்ட் 

சைக்கிளுக்கு எண்ணெய் 
சொத்தையாய் ஒரு நண்பன்

என
நீ சாலையைக்  கடக்கும்வரை
குறுக்குச்சந்தில் 
காத்திருந்ததைப்போலவே
இருந்தது
இன்றும்.
-இயற்கைசிவம் 


5 comments:

  1. என்றும் அழகுதான்..காத்திருத்தலும் கவிதையும் காதலும்.

    ReplyDelete
  2. எந்த‌ முகாந்திர‌முமின்றி திடுதிப்பென‌ இப்ப‌டித்தான்... சில‌ நினைவுக‌ள்... நினைவ‌லையில் அன்றைய‌ அதே குதூக‌ல‌க் குதிப்புட‌ன்!

    வ‌லைய‌மைப்பு ந‌ளின‌மாகிவிட்ட‌து.

    ReplyDelete
  3. நிலாமகளை வழிமொழிகிறேன். இனிப்போ கசப்போ பழம்நினைவுகள் காரணமின்றி ஞாபகத்துக்கு வந்துவிட்டால் கட்டறுத்துக்கொண்டு அந்தக் காலத்துக்கே பயணப்பட்டுவிடுகிறது இந்த பாழாய்ப்போன மனம்.

    ReplyDelete
  4. திரு ரிஷபன், சகோதரி நிலாமகள், தோழி கீதா,
    கருத்துக்களின் மூலம்
    தங்களின் நியாபகக்கடலும்
    தலும்பியதாகக் பகிர்ந்தீர்கள்
    மகிழ்ச்சி , நன்றி.

    ReplyDelete
  5. //இஸ்த்ரி போட்ட சட்டை
    வெளுத்திருக்காத பேண்ட்

    சைக்கிளுக்கு எண்ணெய்
    சொத்தையாய் ஒரு நண்பன்//
    அழகு வர்ணனை!

    ReplyDelete