Tuesday, 6 December 2011

அழகி...












ஒன்றிரண்டு இறகுகள்
சிந்திய நிலையில்
பூட்ஸ் தடயங்களோடு
எறும்புகள் மொய்த்துக்கிடந்தது
அழகி
அன்று முழுதும்
விம்மிக்கிடந்தாள் மல்லிகா
இன்று வழக்கம்போல் 
பருக்கைகள் கொஞ்சத்திற்க்காக
வரிசையில் நிற்கிறாள் 
அவளின்
அப்பாவும் தம்பியும் கிடந்த
அன்றின் மறுநாளும்
அவள்
இப்படித்தான் நடந்துக்கொண்டாள்.
-இயற்கைசிவம்

2 comments:

  1. வாழ்க்கையின் யதார்த்தத்தைக் காட்டும் வரிகள். அகோரப் பசியின் வேகம் அழுகையையும் ஆற்றாமையையும் புறந்தள்ளி அடுத்தநாளுக்கான தன் தேடலை முன்னிறுத்திவிடுகிறதே. மனம் தொட்ட கவிதை.

    ReplyDelete
  2. எனக்குக் கொஞ்சம் குழப்பமாகவே இருக்கிறது இந்தக் கவிதை !

    ReplyDelete