Monday, 5 December 2011

வண்ணங்களை உதாசினத்த மூன்று ஓவியங்கள்.

மாபெரும் உலகச்சந்தையில்
காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன
மூன்று தூரிகைகள்
ஏற்ப்பாட்டாளன் சொல்கிறான்
'இது
வண்ணங்கள் பரிக்கப்பட்டவர்களுக்கான
பிரத்தியேகமானது'
எந்த வண்ணம் தோய்த்தாலும்
கறுமையே மிளிரும் என்பது
ஓவியர்களின் தீர்க்கம்,
மாபெரும் உலகச்சந்தையின்
பயனாளிகள் யாவரும்
மூன்று தூரிகைகளையும்
நின்றுப் பார்ப்பது
அவரவரின் நீர்த்தக்க் குருதியை
அடர்வாக்குவதுக் குறித்து,
மாபெரும் உலகச்சந்தையை
வெறித்துக்கொண்டிருக்கின்றன
வண்ணங்களை உதாசினத்த
மூன்று ஓவியங்கள்.

-இயற்கைசிவம்
 

No comments:

Post a Comment