Monday, 9 January 2012

அவனோடு இன்னொருநாள்...



நதியில் தவறிய துளியில் இன்று இங்கே தொடுங்கள் 


காற்றைக் காணமுடிவதில்லை என்றேன்
ஆம்
அதனால்தான்
இந்தா
பிடித்துக்கொள் என
கைகளை ஏந்தச்சொல்லி கொடுத்துவிட்டு
பாரேன்
எவ்வளவு நெகிழ்வாக இருக்கிறது
விழுந்துவிடுவதைப் பற்றிய
கவலையுமில்லை
அது உடைவதுமில்லை
மட்டுமன்றி
தவறவிட்டாலும்
நம்மீதே ஒட்டிக்கொள்கிறது...
என்று
காற்றைப்பிடித்தபடி விடைபெறுகிறான்
போய்க்கொண்டிருக்கும்
அவனது இன்னொரு கைகளில் இருந்தது
எப்போதோ உதிர்ந்துவிட்டிருந்த
இறகு.
-இயற்கைசிவம்

4 comments:

  1. வாவ்.. காற்றைக் கையில் பிடித்த கவிதைக்குள் நானும் பிடிபட்டேன்.

    ReplyDelete
  2. ஒரு கையில் இறகு. மறு கையில் காற்று. இரண்டுமிருந்தும் பறக்கவியலாது நடக்கிறான் விநோதமாய் ஒரு காற்றுக்காதலன். அழகு. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. காற்றை நானும் கையில் பிடித்துப் பார்த்தேன் கவிதையை நடுவில் நிறுத்திவிட்டு !

    ReplyDelete
  4. தங்கள் மூவருக்கும் அன்பு நிறை நன்றிகள் பல...
    எக்கச்சக்கமான கருத்துக்களை விட இக் கச்சிதமான
    கருத்துக்கள் பூரிக்கவைக்கிறது...
    -இயற்கைசிவம்

    ReplyDelete