Sunday, 15 January 2012

கடவுளரின் லிபி

ம் என்ற சொல்லுக்கு இங்கே தீண்டுங்கள் 

புள்ளிகளில் சொற்கள் கொண்டவனுக்கு
தீண்டும் யாவற்றிலும்
பேசக் கிடைக்கின்றன புள்ளிகள்
சொற்களற்ற இடமே இல்லையா
என்றவனுக்கு
பதிலில்லாமல் அவனது
கைகளைப் பற்றிக்கொண்டேன்
இன்னும் இன்னும்
கணிசமாக அவனது கைகளை
பற்ற நினைக்கையில்
தவிர்க்கவியலாமல் போனது
சில புள்ளிகள்
க.ண்.ணீ.ர்
என சொல்லாக்கி திகைத்தவன்
நான்
நூற்றின் முறைகள் முயன்றிருந்த
இருளை
புரிந்துக் கொண்டதாக
கைகளை விடுவித்துக்கொண்டு
செல்கிறான்
சென்றுவிட்டான்
அப்போதிருந்து
கூண்டிலிருந்து வெளிவந்த
கோழியின் சிறகடிப்பில்
நதியின் கறை விளிம்பில் கேட்கும்
சலசலப்பில்
இரவின் நிசப்தத்தில் சொட்டும்
சரியாக மூடப்படாத
குழாயில் ...
என
அன்றாடங்களில்
நீக்கமற நிறையும்
யாவற்றிலும்
கேட்கும் குத்தச்சு சப்த்தங்களில்
பழகத்துவங்கியிருந்தேன்
கடவுளரின்
லிபியை.
-இயற்கைசிவம் 

2 comments:

  1. மனம் கனக்கும் ஒரு கவிதை !

    ReplyDelete
  2. புள்ளிகளால் உலகறிந்தவனின் உலகை நாமறிய இயலாதது பெரும் துர்பாக்கியமே. கவிதை மிகவும் நன்று.

    ReplyDelete