Friday, 20 January 2012

ஆடையின் நீல நிறப் பூக்கள்

கடலின் வாழ்த்துச் செய்தி இங்கே  படியுங்கள் 
எந்த நோக்கமுமில்லை
இத்தனைக்கும்
தனிமையின் பெருந்திரளின்
சாயலுமில்லை அதில்
வெக்கையில் நொதித்து
துர்மனம் பரப்பிக்கொண்டிருக்கும்
காயங்களின்
பிசுபிசுப்புமில்லை
மேலும்
மிக அருகிருந்து
என்னைப் பருகி பருகி
உப்பியதாலேயே
நானில்லை அதில்
தெருப்பிள்ளையிடம் வாங்கி ஊதுகையில்
அவளின் முகத்தருகே சென்று
உடைந்திருந்தது குமிழ் ஒன்று
அவ்வளவுதான்
ஆடையின் நீல நிறப் பூக்கள் 
வீதி நெடுக சிந்தும்படிக்கு
சிரித்துச் செல்கிறாள்.
-இயற்கைசிவம்

3 comments:

  1. தெருப்பிள்ளையிடம் வாங்கி ஊதுகையில்
    அவளின் முகத்தருகே சென்று
    உடைந்திருந்தது குமிழ் ஒன்று

    பின்னாலேயே வரவழைத்து விட்டது..

    ReplyDelete
  2. நீல நிறப்பூக்கள் காற்றில் அலைந்து கொண்டே இருக்கின்றன .அற்புதமான எழுத்து.வாழ்த்துக்கள்

    ReplyDelete