Wednesday, 8 February 2012

செய்திகள் - 1

மதிப்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம், எனது வெகு நாட்களின் கனவான நேர்த்தியான சிற்றிதழ் துவங்குவது என்பது நிஜமாகும் தருணத்தில், அதனை தங்களோடு பகிர்வதில் மனம் நிறைகிறேன்,

வெயில்நதி என்று நமது வலைப்பூவின் பெயரையே தாங்கி, வரும் 'மே' மாதத்திலிருந்து வெயில்நதி
தனது பெருக்கெடுத்தலை துவங்கவிருக்கிறது.

அன்பும் மதிப்பும் நிறைந்த நேர்த்தியான படைப்பாளிகளும் நண்பர்களுமான 
திரு பாரதிக்குமார், திரு பா. தியாகு, திரு சுந்தர்ஜி, திரு நறுமுகை, J. ராதாகிருஷ்ணன்
ஆகியோரின் சீர்படுத்துதலிலும்

தங்கள் அனைவரின் மேலான ஒத்துழைப்புகளிலும்
பங்கேற்புகளிலும் வெயில்நதி வற்றாமல் ஓடும் என்பதில் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்.

முதலில் வெயில்நதி இரு திங்கள் தனிச்சுற்று இதழாக, ரூபாய் 15 மற்றும் ஆண்டு சந்தா ரூபாய் 90,
இரு ஆண்டுகள் சந்தா 170 என 40 பக்கங்கள் கொண்ட இதழாக வரவிருக்கிறது. 

நவீன கவிதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு கவிதைகள் கதைகள், படைப்பாளுமைகளின் நேர்காணல்கள், ....,  என உங்களின் வாசிப்பனுபவத்தை மேலும் சிலிர்க்கச் செய்வதான இந்த முயற்ச்சியில்,

நீங்களும் படைப்புகள், சந்தாக்கள், தோழமைகள் சகிதம் பங்கேற்று இதழ் சிறக்க உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன்,

மிக்க நன்றி,
இயற்கைசிவம்.

அணைத்து தொடர்புகளுக்கும்

இயற்கைசிவம்
எண் :- 1 டி, சந்தை மேடு, சிருகடம்பூர், செஞ்சி - 604202 ,
விழுப்புரம் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா.,
கைப்பேசி எண்கள் :- 99411 16068 , 89409 62277 ,
மின்னஞ்சல் முகவரிகள் :-
veyilnathi@gmail.com

( படைப்புகளை அஞ்சலிலும், மின்னஞ்சலிலும் அனுப்பலாம், சந்தாவிற்கான வங்கி கணக்கெண்ணை விரைவில் தெரிவிக்கிறேன் தற்போதைக்கு மேற்கண்ட முகவரிக்கு m.o செய்யவும் வேண்டுகிறேன். ) 

6 comments:

  1. வாழ்த்துக‌ள் ச‌கோ...

    அசாத்திய‌ உழைப்பும் அர்ப்ப‌ணிப்பும் ம‌னோதிட‌மும் வேண்டியிருக்கும் சிற்றித‌ழ் துறையை த‌மிழ் மேலான‌ த‌ணியாத‌ ஆர்வ‌மேலீட்டில் கையிலெடுத்திருக்கிறீர்க‌ள். இறைய‌ருள் நிலைக்க‌ட்டும்!

    ReplyDelete
    Replies
    1. எனது முயற்சியை மிகுந்த மன நிறைவுடன் வாழ்த்தும் உங்களுக்கு அன்பான நன்றிகள். தங்களது படைப்புகளையும் தந்து உதவுமாறு வேண்டுகிறேன். படைப்புக்களை www.veyilnathi@gail.com என்ற முகவரிக்கு உடனே அனுப்பவும். நன்றி .

      Delete
  2. தங்களைப் போன்ற நல்ல தரமான படைப்பாளிகளின் ஆக்கங்கள் பாரெங்கும் பரவி தம்மை நிலைநிறுத்தட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எனது முயற்சியை மிகுந்த மன நிறைவுடன் வாழ்த்தும் உங்களுக்கு அன்பான நன்றிகள். தங்களது படைப்புகளையும் தந்து உதவுமாறு வேண்டுகிறேன். படைப்புக்களை www.veyilnathi@gail.com என்ற முகவரிக்கு உடனே அனுப்பவும். நன்றி .

      Delete
  3. மிக அருமையான முயற்சி.மனம் நிறைந்த வாழ்த்துகள் !